_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, January 11, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சமையம் பண்டித் ஜவர்கலால் நேரு இந்தியாவில் பொருளியல் நிலைமை போதிய அளவு இல்லாததால் நாட்டு மக்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் கோரிகையிட்டார், " கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சேவைகள் செய்யுங்கள்" என்றார். அதன்படி சில அமைப்புகள் தனது சேவையை செய்தது. இதில் முக்கிய பங்கழித்தது கிருஸ்துவ அமைப்புதான் என்பது பாராட்டகூடியது. மருத்தவத்திற்கும் கல்விக்கும் இருந்த சேவை மனப்பன்மை இன்று இல்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று. இன்றொ கல்வியும், மருத்துவமும் காசு சம்பாரிக்கும் இடமாக இருக்கின்றது.

மத்திய அரசின் முக்கிய திட்டமான அவசர சேவை ஆம்புலன் 108 அந்த வகையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களின் சேவை மெச்சும்படியாக உள்ளது. அதை முறைப்படி அமுல்படுத்தும் தமிழக அரசுக்கும் ஒரு சலூட்...... ஒவ்வொரு அம்புலன்ஸிலும் பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இருப்பதும் அவர்களுக்கு சமூக மனப்பாண்மை மற்றும் சேவை மனப்பாண்மை இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது. நூற்றுக்கு மேற்பட்ட பிரசவம் ஆம்புலஸிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு வண்டியில் எல்லா வசதிகளும் பயிற்சி பெற்ற செவிலியர்களும் இருப்பது பாராட்டியே ஆகவேண்டும்...






மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்...... இதில் முக்கியமாக நான் பார்த்தது கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை.........

வாழ்த்துகள் 108
பாராட்டுகள் 108



அன்புடன்

ஆ.ஞானசேகரன்



Sunday, January 9, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)

நமது நண்பரும் பதிவருமான கோவை சக்திக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது , சென்னை Viveka Educatinal & Charitable trust மூலமாக திரு பொன் பரமகுரு M.A, B.L, I.P.S அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ண்பர் சக்தி மென்மேலும் சிறப்பாக சேவைகள் செய்ய வாழ்த்துவதுடன் பாராட்டுகளும் சொல்வோம். நம்முடைய பாராட்டுகள் அவரை செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன். நண்பர்களே! வாழ்த்துங்கள் அவரை.......

அன்று வழங்கப்பட்ட விருதுவின் புகைப்படமும்,... அவருக்கு விருது வழங்கும் நிகழ்வும் புகைப்படங்களாக பதிந்துள்ளேன்...

நண்பர் கோவை சக்தியின் வலைப்பக்கம்
ஜெய் ஜவான்....





நண்பர் சக்தி சமூக சேவையாளார் மட்டுமில்லை, சிறந்த தேசப்பத்தர். அவரை பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி

அன்புடன்

ஆ.ஞானசேகரன்

Friday, January 7, 2011

இன்று ஒரு நாள் மட்டும்...

இன்று ஒரு நாள் மட்டும்...

எல்லோருக்கும் தெரிந்தது, "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை". கடன்காரனுக்கு பயந்த ஒரு தந்தை தன் மகனிடன் " ராமையா வருவான் வந்தால் அப்பா இல்லை என்று சொல்லிவிடு" என்று அவன் குருதுகுள் சென்று பதுங்கி விடுவான். ராமையா வந்து மகனிடன் " அப்பா எங்கே?" என்று கேட்டார். அவன் மகனோ "என் அப்பா குருதுக்குள் இல்லை" என்று சொல்லி உண்மையையும் போட்டு உடைத்துவிடுவான். இப்படிதாங்க நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணங்களுக்காக நாட்களையும் சந்தர்ப்பங்களையும் கடத்தி வருகின்றோம். இன்று அல்லது இப்பொழுது இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனபோக்கில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க தவிர்க்கின்றோம். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு வகை விவேகம் என்று வைத்துக்கொண்டாலும் அதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியுமா?


தற்கால சூழலில் அலைபேசி அலைப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்க நினைக்கின்றோம்.
1. அலைபேசியை அணைத்து விடுவது.
2. அழைக்கும் நபரின் எண்ணை பார்தததும் அழைப்பை எற்றுக்கொள்ளாமல் இருப்பது.
3. தவறி எடுத்துவிட்டாலும் தொடர்பு சரியாக இல்லாது போல நடிப்பது.
4. அவசரமாக இருப்பது போல தொடர்பை துண்டிப்பது.

இன்னும் எத்தனையோ முறைகளில் பிரச்சனைகளை தவிற்க முயற்சிக்கின்றோம். எதிராளிகள் இன்னும் புத்திசாலியாக வேற்று எண்ணுடன் தொடர்புக்கொண்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவதும் உண்டு. அழைப்பை ஏற்றுக்கொள்ள திரண் இல்லாமல் இருப்பது தொடர்புக்கொள்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை, பல நேரங்களில் அவர்களும் விட்டுக்கொடுப்பதால் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுப்பு கிடைக்கின்றது. அதுவும் எவ்வளவு காலங்களுக்கு சமாலிக்க முடியும்? இப்படி தற்காலிகமாக தப்பிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சரியாக பயன் படுத்தினால் நல்ல தீர்வுகளை நம்மால் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது. அவரால் நமக்கு பல உதவிகள் கூட கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.

"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."


இன்னும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.