_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 22, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....13

ஏன்? எதற்கு? எப்படி?....13

மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு. உயிரை முற்றிலும் கட்டுப்படுத்துவது இந்த மூளைதான். இது வரை நமது அறிவியல் முழுமையாக மூளையின் கட்டமைப்பை கண்டறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூளை செயலற்று போனால் அந்த உயிர் இறந்துவிட்டதாக சட்டமே சொல்லுகின்றது. மூளை செயலிழந்தால் சிறுக சிறிக அனைத்து உறுப்புகளும் செயலற்று போகும். இறுதியில் அந்த உயிர் இறந்துவிடும்.

நாம் ஒரு பொருளை குறிப்பார்த்து கல்லால் அடிக்கின்றோம் என்றால் கண்ணால் பார்க்கப்பட்ட அந்த பொருளை கையால் எப்படி சரியாக அடிக்கப்படுகின்றது? அதே போல எல்லோராலையும் அப்படி சரியாக அடிக்க முடிவதில்லையே ஏன்? கண்ணால் பார்க்கப்படும் பொருள் விழித்திரையில் படும்பொழுது அந்த பொருளின் தூரம் மற்றும் முப்பரிமாணம் மூளையால் கணக்கிடப்படுகின்றது. எந்த அளவிற்கு உற்று பார்க்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு அதன் கணிப்பும் சரியாக இருக்கும். அதனால்தான் எல்லோராலையும் சரியாக செய்ய முடிவதில்லை. இதற்கு தகுந்த பயிற்சி தேவையாகின்றது. உற்று நோக்குதல் மற்றும் ஒரு நிலைப்படுத்துதல் முக்கியம். அந்த நிலையை எட்ட மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமீபத்தில் வந்த ஆங்கில திரைப்படம் (The_karate_kid_2010) கராட்டே கிட் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி "ஒரு பெண் பாம்பின் கண்களை உற்று நோக்கி பயிற்சி பெறுவதாக இருக்கும்"... இப்படிப்பட்ட பயிற்சிதான் மூளைக்கு தேவை. இந்த காட்சிதான் படத்தின் இறுதி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

ஒரு கண்ணாடி சன்னலுக்கு அருகில் மாங்காய் மரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். சன்னலில் படாமல் மாங்காயை மட்டும் கல்லால் அடிக்க வேண்டும் என்றால் பல முறை கல் சன்னலை பதம் பார்த்துவிடும் ஏன்? சன்னலை அடிக்க கூடாது என்பது முக்கியமாக கருதுவதால் மூளை சன்னலைதான் அதிகமாக பதியவைக்கின்றது எனவேதான் கல் சரியாக சன்னலை பதம் பார்த்துவிடுகின்றது. மாங்காவை மட்டுமே மனதில் பதிய வைக்க முறையான பயிற்சி தேவையாகின்றது.


மேலும் சிந்தனைகளுடன்


ஆ.ஞானசேகரன்.