_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, May 21, 2009

சாமானியனின் எண்ணக்குவியல் - வேலுப்பிள்ளை பிரபாகரன்

சாமானியனின் எண்ணக்குவியல் - வேலுப்பிள்ளை பிரபாகரன்

50 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சனையில் 25 ஆண்டுகள் தமிழர்களின் பாதுகாவலனாக இருந்து வழிநடத்திய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று இலங்கை அரசு ஊடகங்களில் அவர் இறந்துவிட்டதாகவும் விடுதலைப் புலிகளிடையேயான போர் அமைதிக்கு வந்துவிட்டதாகவும் இலங்கையில் விழாக்கோலம் ஆக்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் சார்பில் இவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இது ஒரு பித்தலாட்டம் என்று சில ஊடகம் கூறுகின்றது. இதேபோல் முன்பு 1989 ம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக இந்திய அரசு அறிவித்த நிலையில் 1990 ல் தொன்றி பேசியது நினைவில் கொள்ளவேண்டிய விடயம்.

பிரபாகரனின் மரணம் எப்படி? விடை தெரியா கேள்விகள்-தினமலர்

புலிகளின் தலைவர்கள் வஞ்சகமாக கொல்லப்பட்டனர்: பத்மநாதன்-வெப்துனியா

தலைவர் பிரபாகரனின் இறந்த உடல்: பல சந்தேகங்கள் - தமிழ்வின்

மேலும் ஒரு காணோளி



இப்படிப்பட்ட சந்தேகங்களுகிடையே ஒரு சாமானியனின் எண்ணங்களாக,....
வருத்தம்: உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக வைத்துக்கொண்டால் அதற்காக வருத்தப்படாத தமிழன் இருக்கவே முடியாது. அதேபோல் இலங்கையில் நடக்கும் விழாக்கோலம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அப்படியே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக வைத்துக்கொண்டால் தற்பொழுது இலங்கையில் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் தமிழர்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பாமல் விழாக்கோலம் சூடுவதில் அர்த்தமில்லை மேலும் கண்டிக்கக்கூடியது.

எதிர்பார்ப்பது: மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் ரகசிய உதவிகளின் பயனாகதான் பிரபாகரன் என்ற நிலை உருவாக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளும்பொழுது... ஒரு போராளிகளை, 40 நாடுகளில் திவீரவாத இயக்கம் என்ற ஒதுக்கப்பட்டவர்களை கழைவதற்கு இந்திய அரசு ரகசிமாக உதவியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது இந்த சாமானியனின் மனோநிலை. அதுவே சரி என்று ஏற்றுக்கொண்டாலும் அப்பாவி மக்களின் ரணகளம் எக்காரணத்தாலும் ஏற்றுகொள்ளவே முடியாது.

பல நொண்டி சாக்குகளை சொல்லி அப்பாவிகளை காப்பாற்றாமல் இருக்கும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வியும் விண்ணப்பமும். புலிகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்று சொல்லிய இந்திய அரசே, இன்று இலங்கை அரசின் ஒப்புதலின் பேரில் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். மீதம் உள்ள தமிழர்களின் மேல் ஒரு தூசி விழுந்தாலும் நீங்கள் தடுக்க தயாராக உள்ளீர்களா? அவலைகளாக, சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கும் நம் உறவுகளின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தர தயாரா? இதுவரை சொன்ன நொண்டி சாக்கை சொல்லாமல் உதவிகரம் நீட்டுங்கள். அப்படிப்பட்ட அரசைதான் என்னைப்போன்ற சாமானியன் எதிர்பார்கின்றான்.

வரலாற்றில் பிழை: விடுதலை புலிகளின் வரலாற்று பிழைகளாக கூறுவது, ஒன்று மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது அதை தொடர்ந்த சம்பவங்களில் ராஜிகாந்தி கொல்லப்பட்டது. இரண்டாவது தொடர்ச்சியாக தலைவர்களை புலிகளின் தற்கொலை படையால் கொல்ல‌ப்பட்டது. இந்த இரண்டு பிழைகள் நடக்காமல் இருந்திருந்தால் நாம் பேசவேண்டிய விடயம் மாற்றாக இருக்கும்.

செய்யத்தவறியது: 25 ஆண்டுகளாக புலிகள் ஒரு போராளியாகவும், அதனை தொடர்ந்து ஒரு திவீரவாத இயக்கம் என்ற பெயராலும் இயங்கி வந்ததே தவிர அரசியல் சார்ந்த இயக்கமாக மாற்றாமல் இருந்தது ஒரு பெரிய குறை. மேலும் இதுவே அவர்களின் பேரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. போராளிகள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்றாலும் போராளிகளால் தீர்வுகாண்பதில்லை. தக்க தருணத்தில் அதை அரசியல் சார்ந்த இயக்கமாக மாற்றாமல் விட்டது ஒரு பெரிய குறை, குற்றம் என்றே சொல்லலாம்.

செய்யவேண்டியது: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூற்றுப்படி போர் முடிவுக்கு வந்துவிட்டது எனக்கொண்டால், இனி இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப் படவேண்டும். அவர்களுக்கு நாட்டின் உரிமைகள் சமபங்கீடு கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கி சகசநிலைக்கு கொண்டுசெல்ல எல்லா உதவிகளையும் செய்யவேண்டும். இப்படி இலங்கை அரசு செய்யத் தவறும்பச்சதில் இந்தியா போர்கொடி தூக்க தயங்ககூடாது.

போராளிகள் உருவாகுவதில்லை, மாறாக உருவாக்க படுகின்றார்கள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

30 comments:

பழமைபேசி said...

இப்போதைய தேவை நிவாரணமும் அமைதியும்...

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
இப்போதைய தேவை நிவாரணமும் அமைதியும்...//

வழிமொழிகின்றென் நண்பா..

சொல்லரசன் said...

//இன்று இலங்கை அரசின் ஒப்புதலின் பேரில் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். மீதம் உள்ள தமிழர்களின் மேல் ஒரு தூசி விழுந்தாலும் நீங்கள் தடுக்க தயாராக உள்ளீர்களா? அவலைகளாக, சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கும் நம் உறவுகளின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தர தயாரா? //

இவர்கள் கோபம் விடுதலைப்புலிகள் மீதா அல்லது தமிழர்கள் மீதா என்பதுஇனிதெரிந்துவிடும்

குடந்தை அன்புமணி said...

உண்மையாக இருக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். பழமைபேசியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
//இன்று இலங்கை அரசின் ஒப்புதலின் பேரில் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். மீதம் உள்ள தமிழர்களின் மேல் ஒரு தூசி விழுந்தாலும் நீங்கள் தடுக்க தயாராக உள்ளீர்களா? அவலைகளாக, சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கும் நம் உறவுகளின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தர தயாரா? //

இவர்கள் கோபம் விடுதலைப்புலிகள் மீதா அல்லது தமிழர்கள் மீதா என்பதுஇனிதெரிந்துவிடும்//

ஆமாங்க சொல்லரசன், நடப்பவை நல்லவையாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது.

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தை அன்புமணி said...
உண்மையாக இருக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். பழமைபேசியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.//

நன்றி நண்பா,...

Prabhu said...

To all those fascists who grin from ear to ear on the supposed death of Prabakharan...... wait till he comes back and exposes the plastic-surgery gimmicks of the racist SL govt and its army. You will exhaust fumes from all the pores of your body....big and small.

Prabhakaran has already been killed several times. Government of Sri Lanka is involved in ugly propaganda through Indian Channels, which are backed by RAW, like Times Now, NDTV, CNN IBN only. Did anybody see a similar tone in BBC ??? Still the BBC website says, with carefully worded sentences, unlike these fascist, nauseatingly stupid Indian channels, "Sri Lankan television stations broadcast footage of a body purported to be that of Prabhakaran"

Even if Prabhakaran happens to die before attaining Eelam, the death would be like that of Nethaji...No one can prove if he is alive or dead. Nobody can capture any evidence...even ashes....Government of Sri Lanka claims it is end of war. Indeed it is end of Eelam War 1. Eelam War 2 will start and that will be in a new form...unbearable by Sinhala chauvinists. Already when they left Killlinochi, many batches of 400 each, highly trained tigers have either moved out of the country or intruded inside Lanka itself for a future attack.

Wait and see...Tigers are gonna come alive in a different form. Never in the history a Liberation Struggle has failed. Eelam Struggle too will not.

Tamizhan endru sollada.

ஆ.ஞானசேகரன் said...

// Prabhu said...
Tamizhan endru sollada.//

உங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி பிரபு...

na.jothi said...

மகிந்தாவின் பாராளுமன்ற உரையில்
அவங்க நாட்டு மக்களுக்கு என்ன
செய்யவேண்டியதை பற்றி யாரும்
எங்களுக்கு சொல்லை தேவையில்லை
சொல்லியிருக்கார்
இதுக்கு என்ன அர்த்தம் ?

ஏற்கனவே விடுதலை புலிகள் போராடும்பொழுது அது உள்நாட்டு விவகாரம் என்று கூறிய இந்தியா இப்ப எப்படி கேட்க போகுது.

தேவன் மாயம் said...

தமிழ்மக்கள் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரச்சினையை எல்லா கோணங்களில் இருந்தும் அலசி இருக்கீங்க.. ஈழத் தமிழ் மக்களுக்கான இப்போதைய தேவை ஒரு நிம்மதியான வாழ்வு.. அது கிடைக்க வேண்டும்.. அவ்வளவுதான்

Anbu said...

\\பிரச்சினையை எல்லா கோணங்களில் இருந்தும் அலசி இருக்கீங்க.. ஈழத் தமிழ் மக்களுக்கான இப்போதைய தேவை ஒரு நிம்மதியான வாழ்வு.. அது கிடைக்க வேண்டும்.. அவ்வளவுதான்\\

repeat

ஆ.ஞானசேகரன் said...

//J said...
மகிந்தாவின் பாராளுமன்ற உரையில்
அவங்க நாட்டு மக்களுக்கு என்ன
செய்யவேண்டியதை பற்றி யாரும்
எங்களுக்கு சொல்லை தேவையில்லை
சொல்லியிருக்கார்
இதுக்கு என்ன அர்த்தம் ?

ஏற்கனவே விடுதலை புலிகள் போராடும்பொழுது அது உள்நாட்டு விவகாரம் என்று கூறிய இந்தியா இப்ப எப்படி கேட்க போகுது.//

வணக்கம் ...நண்பரே
உலகம் முழுவதும் இப்பொழுது போராட்டம் தொடர்கின்றது, நீதி கிடைக்கும் என்ற நம்புவோம்.. உங்கள் வருகைக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//thevanmayam said...
தமிழ்மக்கள் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும்!//


வாங்க தேவன்மாயம் சார்.. எல்லோருடைய ஆசைகளும் அதுதான்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
பிரச்சினையை எல்லா கோணங்களில் இருந்தும் அலசி இருக்கீங்க.. ஈழத் தமிழ் மக்களுக்கான இப்போதைய தேவை ஒரு நிம்மதியான வாழ்வு.. அது கிடைக்க வேண்டும்.. அவ்வளவுதான்//

வாங்க கார்த்திகை பாண்டியன்.. எல்லோருடைய ஆசைகளும் அதுதான்..

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//Anbu said...
\\பிரச்சினையை எல்லா கோணங்களில் இருந்தும் அலசி இருக்கீங்க.. ஈழத் தமிழ் மக்களுக்கான இப்போதைய தேவை ஒரு நிம்மதியான வாழ்வு.. அது கிடைக்க வேண்டும்.. அவ்வளவுதான்\\

repeat//

மிக்க நன்றி நண்பா

ஷண்முகப்ரியன் said...

ஈழ மக்களின் உண்மையான வரலாற்றையும் ,விடுதலைப் புலிகள் மற்றும் இன்னும் அதனை ஒத்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் திரிக்கப் படாத சரித்திரங்களையும் நாம் யாராவது முறையாகப் படித்திருக்கிறோமா?
அப்போதுதான் அது தர்க்கத்துக்குரிய விவாதமாகும்.
ஆனால் நாம் இங்கே கருத்துச் சொல்வதும்,
உண்மையில் உணர்ச்சி வசப்படுவதும் எல்லாமே ஈழ மக்களின் தாங்க ஒண்ணாத புகைப்பட, வீடியோக் காட்சிகளின் அவலங்களையும்,இன்னல்களையும் பார்த்துத்தான்.

Seeing is believing.

படங்களையும் திரிக்கலாம்.அது ஒற்றையாள் தொடர்புடையதாக இருந்தால்.
ஆயிரக் கணக்கானோர் அழிபடும்,இழிபடும் அவலங்களை யார் எதற்காகத் தயாரிக்க வேண்டும்?
அந்தக் குழந்தைகளும்,பெண்களும்,முதியவர்களும் படும் துன்பம் நிறுத்தப் படவேண்டும்,அவர்கள் தமிழர்கள் ஆக இல்லாமலே இருப்பினும் கூட.
இதற்கு நாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் எல்லோருமேதான் பொறுப்பு.

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
ஈழ மக்களின் உண்மையான வரலாற்றையும் ,விடுதலைப் புலிகள் மற்றும் இன்னும் அதனை ஒத்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் திரிக்கப் படாத சரித்திரங்களையும் நாம் யாராவது முறையாகப் படித்திருக்கிறோமா?
அப்போதுதான் அது தர்க்கத்துக்குரிய விவாதமாகும்.
ஆனால் நாம் இங்கே கருத்துச் சொல்வதும்,
உண்மையில் உணர்ச்சி வசப்படுவதும் எல்லாமே ஈழ மக்களின் தாங்க ஒண்ணாத புகைப்பட, வீடியோக் காட்சிகளின் அவலங்களையும்,இன்னல்களையும் பார்த்துத்தான்.

Seeing is believing.

படங்களையும் திரிக்கலாம்.அது ஒற்றையாள் தொடர்புடையதாக இருந்தால்.
ஆயிரக் கணக்கானோர் அழிபடும்,இழிபடும் அவலங்களை யார் எதற்காகத் தயாரிக்க வேண்டும்?
அந்தக் குழந்தைகளும்,பெண்களும்,முதியவர்களும் படும் துன்பம் நிறுத்தப் படவேண்டும்,அவர்கள் தமிழர்கள் ஆக இல்லாமலே இருப்பினும் கூட.
இதற்கு நாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் எல்லோருமேதான் பொறுப்பு.//

உஙகளின் ஞாயமான உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டீர்கள் சார். நானும் அதை ஏற்கின்றேன்..

அவர்கள் தமிழர்கள் ஆக இல்லாமலே இருப்பினும் கூட.
இதற்கு நாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் எல்லோருமேதான் பொறுப்பு..

ஆ.சுதா said...

ஒவ்வொரு கேள்விகளும் பல முனைகளிலிருந்து எழுகின்றது.
நிராயிதமாய் நிர்க்கும் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் பார்ப்போம்

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
ஒவ்வொரு கேள்விகளும் பல முனைகளிலிருந்து எழுகின்றது.
நிராயிதமாய் நிர்க்கும் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் பார்ப்போம்//

வாங்க ஆ.முத்துராமலிங்கம் ..

நிராயிதமாய் நிர்க்கும் உறவுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கவேண்டுமாய் வேண்டுவோம்,..

ஆதவா said...

உங்களது வழக்கமான அலசல்... நாங்கள் சொல்லத் தவறியதை, சொல்ல முடியாமல் முழித்து நின்றதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

காலம் பதில் சொல்லட்டும் எனும் சொலவடைக்கு ஏற்றாற்போல, தமிழர்களுக்கான இலங்கை அரசின் நிலையை வரும் காலம் பதில் சொல்லும்!!!

Muniappan Pakkangal said...

If there is real concern for Tamilian welfare,those who have come to India & in camps also should be settled in eezham at their own place.Tamilians & their welfare should be safeguarded.It is not over with Prabaharan.It has started now only as all tamilians in the world have their eye on eezham.

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
உங்களது வழக்கமான அலசல்... நாங்கள் சொல்லத் தவறியதை, சொல்ல முடியாமல் முழித்து நின்றதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

காலம் பதில் சொல்லட்டும் எனும் சொலவடைக்கு ஏற்றாற்போல, தமிழர்களுக்கான இலங்கை அரசின் நிலையை வரும் காலம் பதில் சொல்லும்!!!//

வணக்கம் ஆதவா,
காலம் தமிழனுக்கு நல்ல பதிலை சொல்லட்டும்.. அதைவிட தமிழனின் ஒற்றுமையும் ஓங்கட்டும்...

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
If there is real concern for Tamilian welfare,those who have come to India & in camps also should be settled in eezham at their own place.Tamilians & their welfare should be safeguarded.It is not over with Prabaharan.It has started now only as all tamilians in the world have their eye on eezham.//

நீங்கள் சொல்வதுபோல ஈழத்தமிழ்னின் அவல நிலை உலகமக்கள் கண்ணில் படுகின்றது. இது ஒரு நல்ல தீர்வுக்கு படியாக அமைந்தால் சரி ,...

மிக்க நன்றி ஐயா...

வேத்தியன் said...

நல்ல பதிவு...

(இவ்வளவு தான் இலங்கையில் இருந்து நான் சொல்ல முடியும்..
:-) )

ஆ.ஞானசேகரன் said...

//வேத்தியன் said...
நல்ல பதிவு...

(இவ்வளவு தான் இலங்கையில் இருந்து நான் சொல்ல முடியும்..
:-) )//

நன்றி வேத்தியன்

நசரேயன் said...

//பழமைபேசி said...
இப்போதைய தேவை நிவாரணமும் அமைதியும்...
//

நானும் தான்

ஆ.ஞானசேகரன் said...

/// நசரேயன் said...
//பழமைபேசி said...
இப்போதைய தேவை நிவாரணமும் அமைதியும்...
//

நானும் தான்///

வணக்கம் நசரேயன் வருகைக்கு மிக்க நன்றி..

"உழவன்" "Uzhavan" said...

இப்போதெல்லாம் இதுபற்றி ஏகப்பட்ட பதிவுகள்.. இதையும் தாண்டி, நாம் என்ன செய்யவேண்டும் என்ற வகையில் சிந்தித்து அனைவரையும் ஒன்று சேர்க்க முயலுங்களேன்..

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
இப்போதெல்லாம் இதுபற்றி ஏகப்பட்ட பதிவுகள்.. இதையும் தாண்டி, நாம் என்ன செய்யவேண்டும் என்ற வகையில் சிந்தித்து அனைவரையும் ஒன்று சேர்க்க முயலுங்களேன்..//

நல்ல எண்ணம் நண்பா.. அதைதான் நானும் எதிர்ப்பார்க்கின்றேன்..