_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 29, 2008

வெற்றியின் ரகசியம் (பரமரகசியம்)

வெற்றியின் ரகசியம் (பரமரகசியம்)
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை!
வெற்றிப் பெற்ற மனிதரெல்லாம் புத்திச்சாலியுமில்லை!....... (சந்திரபாபு)




எங்கள் ஊரில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த சிறப்பு இப்பொழுது இல்லை என்பதும் வருத்தப்படவேண்டிய ஒன்று. பொங்கல் விழாவில் போட்டிகள் நடத்துவார்கள், போட்டிகளில் பங்கெடுப்பதும் பார்ப்பதும் தனி அலாதியான மகிழ்ச்சிதான்... இப்படிப்பட்ட போட்டிகளில் மிகமுக்கியமான போட்டி கபடி, மாட்டு வண்டி வேகப் பந்தயம் மற்றும் மிதிவண்டி வேகப்போட்டி.

மிதிவண்டி வேகப்போட்டியில் அதிகமான இளஞர்கள் கலந்துகொள்வார்கள். இந்த போட்டியில் இரண்டு மூன்று ஊரெல்லைகளை தொட்டு வரவேண்டியிருக்கும்.. இந்த போட்டியில் தொடர்ந்து மூன்று முறை ஒரு பெரியவர் வெற்றிப்பெற்றார். வேட்டியை கோவணமாக கட்டிக்கொண்டு தனது பழய மிதிவண்டியில் செல்லும் வேகமொ தனி புகழ்தான். ஒருமுறை அவரிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டேன், ... நான் வெற்றிப்பெறவேண்டும் என்று எண்ணத்துடன் கலந்துக்கொள்வதில்லை என்னுடைய பங்களிப்பை கொடுப்பதற்காகதான் கலந்துக்கொண்டேன். அதுபோல நான் செல்லும்போது வேகம் சீராக செல்லுவேன் பதட்டப்படமாட்டேன். எனக்கு முன் செல்லுவோரை பற்றி கவலைப்படாமல் அவரை முந்திசெல்ல முயற்சியும் செய்யமாட்டேன். எனக்கு பின் வருவோர் என்னை முந்தாமல் பார்த்துக்கொள்வதுடன்... என்னுடைய சீரான வேகம் குறையாமல் பார்த்துக்கொள்வேன். இதுவே என்னை வெற்றியடைய செய்கின்றது என்று கூறினார்..

ஆமங்க இந்த வெற்றியின் ரகசியம் போட்டிகளில் மட்டுமில்லைங்க, வாழ்கையில் வெற்றிப்பெறுவதற்கும் பொருத்தமாகதான் இருக்கும். இதுபோல என்னுடைய வெற்றியும் சிறப்புதானுங்க.. இந்த போட்டியில் வெற்றி எனக்கு மட்டுமே. என்னுடைய போட்டி ஒரு தனிக்கோடு இதில் போட்டி வைப்பவனும் போட்டியில் கலந்துக்கொள்பவனும் நானே! இங்கு வெற்றி பெறுவதும் நானே!.... போட்டி நேற்றைய நானுக்கும் இன்றைய நானுக்கும் நடக்கும், போட்டியில் வெற்றிப்பெறுவது இன்றைய நான். பின் இன்றைய நான் நாளைய நான்னுடன் போட்டியிட தயாராகும். இதில் வெற்றிப்பெறுவதும் நாளைய நானே!! எப்பொழுதும் வெற்றியின் மகழ்சியிலிருப்பதும் நானே!!!...

நீங்களும் உங்களுடன் போட்டியிட்டு வெற்றிப்பெற வாழ்த்துகளுடன் உங்களின் பிரியமான நான்...

0 comments: